தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Idiom | n. தனிமரபு, மரபுக்கூறு, மொழிமரபுத்திறம், நாட்டுமரபுத்திறம், மக்கள் மரபுமொழி, நாட்டுமரவுமொழி, மொழியின் வகை திரிபு, பேச்சு வகைமரபு, மரபுத்தொடர், மரபுவழக்கு. |
I | Idiomatic | a. மொழியின் தனிச் சிறப்பியல்பான, மொழிமரபுக்குரிய, மொழிவழக்குக்கு ஒத்த. |
I | Idiopathy | n. தனிமனிதரின் தனிச்சிறப்புக்குரிய அனுபவம், (மரு) வேறொரு நோயின் வழிநிலையாய் அமையாமல் முதல் நிலையாகத் தோன்றும் நோய். |
ADVERTISEMENTS
| ||
I | Idioplasm | n. (உயி) மரபுவழிச் சிறப்பியல்பினை அறுதியிடும் ஊன்மக்கூறு. |
I | Idiosyncrasy | n. தனிமனப்போக்கு, தனிச்சிறப்புக்குரிய பண்பு, தனி நுலாசிரியருக்குச் சிறப்பியல்பான மொழிநடை, தனிமுரண்பாடு, பொதுமீறிய தனியியல்பு, (மரு) தனிமனிதருக்குச் சிறப்பியல்பான உடலமைப்பு. |
I | Idiot | n. மட்டி, முழுமூடன், ஒன்றுக்கும் உதவாதவன், முழுமகன் பேதை. |
ADVERTISEMENTS
| ||
I | Idiotic | a. மட்டிக்குரிய, மடமைவாய்ந்த. |
I | Idle | a. சோம்பலான, மடிமைவாய்ந்த, சோம்பியிருக்கிற, முயற்சியற்ற, செயல்விருப்பமற்ற, வேலையில்லாத, விளைவற்ற, பயனற்ற, வீணான, செயல்வகையில் ஆதாரமற்ற, (வினை) சோம்பியிரு, வீண்காங்கழி, பயனற்றவகையில் பொழுதைப்போக்கு, இயந்திர வகையில் உரிய செயலாற்றாமல் இயங்கு, உந்துவண்டி விமான முதலியவற்றின் வகையில் நீராவிப்புழையின் வாயடைக்கப்பெற்று மெல்ல இயங்கு. |
I | Idleness, idlesse | சோம்பல். |
ADVERTISEMENTS
| ||
I | Idler | n. சோம்பன், சோம்பேறி, காப்பு ஆழி, இயந்திரம் கெட்டுப்போய் நின்றுபோகும்போது செயற்படும் காப்புச் சக்கரம், இயக்க இடையாழி, திசையை மாற்றாமலேயே ஒரு சக்கரத்திலிருந்து மற்றொன்றிற்கு விசையைச் செலுத்துவதற்காக அவைகளுக்கிடையில் பொருத்தப்படும் மூன்றாவது சக்கரம். |