தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
G | Grog | n. நீர்த்தேறல், இனிப்பில்லா நீர்சேர் சாராய வகை, நீர்த்தேறல் அருந்தும் கூட்டுக்குழாம், (வினை) நீர்த்தேறல் அருந்து, வெறுமையாய்விட்ட மிடாவில் வெந்நீருற்றிச் சாராயம் பெறு. |
G | Grog-blossom | n. மட்டிலாக் குடியினால் மூக்கில் ஏற்படும் செந்நிறக் கொப்புளம். |
G | Groggy | a. குடித்த, மட்டுமீறிக் குடித்த, குடிப்பழக்கமுள்ள, குதிரை வகையில் வலிவற்ற முன்னங்கால்களுடைய, குத்துச் சண்டையில் தளர்வினால் நிலைதடுமாறுகிற, தள்ளாடு நிலையிலுள்ள. |
ADVERTISEMENTS
| ||
G | Grogram | n. பட்டும் கவரிமான் மயிரும் கம்பளியும் சேர்த்து நெய்யப்பட்டுப் பசையால் விறைப்பாக்கப்பட்ட முரட்டுத்துணி வகை. |
G | Grogshop | n. சாராயக்கடை, தேறல்விடுதி. |
G | Groin | n. அரை, இடுப்பு, வயிறு தொடை சேருமிடம், (க-க.) இரு வளைவுமாடங்கள் சேரும் கட்டுமான இடைக்கோணம், கட்டுமான இடைக்கோணப்பட்டி, (வினை) கட்டுமான இடைக்கோணமமை, இடைக்கோணப்பட்டியுடன் கட்டு. |
ADVERTISEMENTS
| ||
G | Grolier | n. ஜூன் கிரோலியர் என்ற பிரஞ்சு ஏட்டார்வலர் கண்டு பின்பற்றிய பகட்டணியுடைய புத்தகக் கட்டட முறை, கிரோலியர் ஏடகத்திலுள்ள புத்தகம். |
G | Gromwell | n. முன்பு மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட கல்லையொத்த விதைகளையுடைய செடிவகை. |
G | Groom | n. அரசமாளிகைப் பணியாளர்கள், குதிரைக்காரன், குதிரை நலம்பேணும் பணியாள், மணமகன், மாப்பிள்ளை, (வினை) குதிரையைப்பேணு, குதிரைக்குத் தீனியிட்டு வளர் குதிரையைத் தேய்த்துவிடு. |
ADVERTISEMENTS
| ||
G | Groomsman | n. மாப்பிள்ளைத் தோழன். |